கையாக இறைவனால் கொடுக்கப்பட்ட கூட்டு பொருள். பிராணவாயு கலந்திருப்பதால் நீருக்கு சுவையும், உயிர் தன்மையும் கொண்டுள்ளது. அதைக்கொண்டு இயற்கையே கழிவுகளை நீக்கவும், சுத்தப்படுத்தவும் செய்கிறது. மழை நீர் மேல்பறப்பில் உள்ள அழுக்கு கழிவுகளை அடித்து சென்றாலும், பூமிக்குள் வடிகட்டப்பட்டு சேர்த்து வைக்கபடுகிறது. எந்த எந்த இடத்தில் எந்த தாது உப்புகள் அதிகம் இருக்கின்றதோ அந்த அந்த இடத்துக்குப்படி தாது உப்புக் கரைந்து நீரின் சுவை உண்டாகிறது. சுத்தமான நீர் இளநீரைப் போல குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.
இதையே "நல்ல தண்ணீர்" என்று நம்முன்னோர் கண்டறிந்து வைத்திருகிறார்கள். எந்த எந்த தாது உப்பு கலந்த தண்ணீர் எந்த எந்த வியாதியை உண்டாக்கும், எந்த எந்த வியாதிகளை குணமாக்கும் என்பதையும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
தண்ணீரை மென் நீர் எனவும், கடின நீர் எனவும் சொல்வார்கள். தாது உப்புகள் அதிகம் கலந்த நீர் உப்பு நீர் (கடின நீர்) எனவும், கரைந்துள்ள உப்புகளில் தன்மையான தண்ணீரில் நீராடினால் என்னென்ன நோய்கள் தீரும் என்பதையும் கண்டிருந்தனர். உதாரணத்திற்கு, தாமிரவரணி நீரை உண்பதால் தேகத்தில் தாமிர சத்து பற்றாக்குறை நீங்கும். எனவே தான் தாமிர பாத்திரங்களில் நீர் வைத்து குடிப்பது, சமைப்பது போன்ற வழிமுறைகளை கடைபிடித்தார்கள். வெண்கல பாத்திரங்கள், வட்டில் தம்ளர்களில் சாப்பிடுவது குடிப்பது போன்ற வழிமுறைகளை கொண்டிருந்ததால் நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.
நமது மண்ணில் நல்ல தண்ணீர் கொடுக்கும் ஊற்றுகள் மிகவும் கொஞ்சமாகவே உள்ளன. ஆகவே அவைகளை வீணாக்காமல் உபயோகிக்க கற்று கொள்ள வேண்டும். நாமே தண்ணீரை மாசு படுத்தி கெட்டு போக செய்யக்கூடாது. இயற்க்கை கழிவு கலந்த நீர் குளம், குட்டைகளில் தேக்கி வைக்கபடுகின்றன. அவற்றில் உள்ள அசுத்தங்கள் நீர்வாழ் உயிரினங்களால் அழுக்குகளை உண்டு நீர் சுத்தபடுத்துகின்றன. நீர் மண்ணுக்குள் சென்றபின் மீதமுள்ள கழிவுகள் வண்டலாக தேங்கி பயிர்களுக்கு நல்ல உரமாகிறது. மேலும் நீர் தேக்கிகளின் அருகாமையில் இருந்து பெறப்படும் நீர் சுத்தமாகவும், நல்ல நீராகவும், சுவையானதாகவும் இருக்கும். மண் செய்யும் ரசாயன மாற்றங்களால்தான் சுத்தமான சுவையான நீர் கிடைக்கிறது. மண்ணில் உள்ள ஆக்சிஜன், மண் சூட்டினால் (நெருப்பு தன்மை) இந்த மாற்றம் ஏற்படுகிறது. அந்த மண்ணை நாம் பலவகைகளில் கெடுத்து நாசப்படுத்தி கொண்டிருக்கிறோம்.

நீர் சகல அழுக்குகளையும், எண்ணெய் பிசுக்குகளையும் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. துணிகளை ஊற வைத்து சுடு நீரில் துவைத்து உலர்த்தும் போது அதிலுள்ள அழுக்கு, எண்ணெய் பசை, கிருமி தொற்றுகள் அனைத்தும் சுத்தம் செய்யபடுகிறது. சூரிய வெயிலில் காய வைக்கும் போது கொஞ்ச நஞ்சம் மிச்சம் உள்ள கிருமிகளும், அழுக்கும் நீங்கி துணி பளிச்சிடுகிறது, சுத்தமாகிறது. ஊற்று நீரில் அதிக ரசாயனம் கலக்காத, உப்புகள் கலக்காத நீராக தேர்ந்தெடுத்து உபயோகபடுத்த வேண்டும். தண்ணீரில் இருக்கும் கிருமிகளை கொல்கிறேன் என்ற பெயரால் நீரை கொதிக்க வைத்து குடிப்பதால் அதிலுள்ள பிராண வாயு நீக்கப்பட்டு தாது உப்புகளின் தன்மை அதிகமாகிவிடுகிறது. சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் ரசாயனங்களை கலந்து வடிகட்டி உயிர் ஊட்டசத்துகள் முற்றிலும் நீங்கிவிடுகிறன. தேகத்திற்கு சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. சத்து மாத்திரை, மினரல்கள், வைட்டமின் மாத்திரைகள் தேவைபடுகின்றன. இது தேவை இல்லாத ஒன்றாகும். இயற்கையாக கிடைக்கும் சத்துள்ள உணவுகளை சுத்தமான தண்ணீரில் சேர்த்து சமைத்தாலே ஊட்டசத்து முழுமையாக கிடைத்துவிடும்.

No comments:
Post a Comment